பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் | 7 வருடங்களுக்கு பிறகு கதை நாயகியாக நடிக்கும் ஆஸ்னா |
தமிழ்நாட்டில் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கிளாரா, மாதுரி தேவியாக சினிமாவில் அறிமுகமானார். 1939ம் ஆண்டு வெளியான 'பாண்டுரங்கன்' படத்தில் இரண்டாவது நாயகியான மாதுரி தேவிக்கு, கதாநாயகி வாய்ப்பு அமைந்தது 1947ம் ஆண்டு. பொம்மன் இரானி இயக்கத்தில் வெளிவந்த 'லட்சுமி விஜயம்' படத்தில் அமுதா, குமுதா என்ற இரட்டை வேடத்தில் நடித்தார்.
அதன்பின் மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான நாயகியாகி. 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார், ஜுபிடர் பிக்சர்ஸின் 'மோகினி' அவர் நடித்த முக்கியமான படம். அடுத்து கே.ராம்நாத் தயாரித்து இயக்கிய 'கன்னியின் காதலி' மாதுரி தேவியின் பன்முக நடிப்புப் பரிமாணங்களை முழுமையாக வெளிக்கொணர்ந்தது. அந்தப் படத்தில் ஆதித்தன், கலைமணி, சந்திரிகா ஆகிய மூன்று வேடங்களில் நடித்தார். இவற்றில் ஆதித்தன் என்பது இளைஞன் வேடம்.
மாடர்ன் தியேட்டஸின் 'பொன்முடி' படத்தில் நாயகன் பி. வி. நரசிம்ம பாரதியுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எம்.ஜி.ஆரின் முக்கிய படங்களான மர்மயோகி, குமாரி படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தார். நகைச்சுவை வேடங்கள், நடனம், நாயகி, இரட்டை வேடம், வில்லி வேடம் என நடிப்பில் சகலாகலா வல்லியாக இருந்தார்.
மாதுரி தேவியின் நடிப்பில் வெளியான மொத்தப் படங்கள் 39. திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த மாதுரி தேவி தந்தையின் வற்புறுத்தலின் பேரில் அவரது நண்பரின் மகனான மேற்கு வங்கத்தை சேர்ந்த எஸ்.முகர்ஜி என்பவரை திருமணம் செய்தார். சினிமாவில் நடிகையாக கொடி கட்டி பறந்தபோதே கணவனின் வற்புறுத்தலால் சினிமா தயாரிப்பில் இறங்கினார். இதனால் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து, ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டே விலகினார். 28 வருடங்கள் வரை சினிமாவில் இருந்து தனித்து வாழ்ந்த அவர் 1990ம் ஆண்டு காலமானார்.
ஹீரோக்கள் ஆதிக்கம் நிறைந்த காலத்தில் தனித்த ஹீரோயினாக அவர் விளங்கினார். யாரும் செய்யத் துணியாத கேரக்டர்களை துணிந்து செய்தார். இன்னார்தான் தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஹீரோக்கள் உத்தரவு போட்டுக்கொண்டிருந்த காலத்தில் ஹீரோக்களை தனது கால்ஷீட்டுக்காக காத்திருக்க வைத்த முதல் நடிகை மாதுரி தேவி.