‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் எப்போ... : முதல் பாடல் வெளியீடு | 'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் | 'வாரண்ட்' தொடரில் போலீசாரின் வலி மிகுந்த வாழ்க்கை : இயக்குநனர் தகவல் | பெண் ஓவியரின் பயோபிக்கில் நடிக்கும் அஞ்சலி சிவராமன் | 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? |

முன்னாள் பிரதமர் ராஜீவ் தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்பத்தூரில் நடந்த கொதுக்கூட்டத்தில் விடுதலைபுலிகளின் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு பல ஆண்டுகளாக நடந்து இறுதியில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கருணை அடிப்படையில் அவர்கள் விடுதலையும் ஆகிவிட்டனர்.
ராஜீவ்-ன் கொலை வழக்கு தொடர்பாக ஏராளமான திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் வெளிவந்துள்ளது. தமிழில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 'குற்றப்பத்திரிகை' என்ற பெயரில் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது 'தி ஹன்ட்: ராஜீவ் காந்தி அசாஸ்னேஷன் கேஸ்' என்ற தலைப்பில் வெப் தொடராக தயாராகி உள்ளது. ஜூலை 4 ம் தேதி முதல் சோனி லிவ்வில் ஒளிபரப்பாகிறது.
இந்த தொடர் புலனாய்வு பத்திரிகையாளர் அனிருத்ய மித்ராவின் 'நைன்டி டேஸை' அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ளது. தேசிய விருது பெற்ற நாகேஷ் குக்குனூர் இயக்கி உள்ளார். அமித் சியால். கார்த்திகேயன், அமித் வர்மாவாக சாஹில் வைத், பகவதி பெருமாள், டேனிஷ் இக்பால் அமோத் காந்த், கிரீஷ் சர்மா, ராதாவினோத் ராஜு, வித்யுத் கர்க், அஞ்சனா பாலாஜி, பி சாய் தினேஷ், ஸ்ருதி ஜெயன், கவுரி மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.