'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
டிவி தொகுப்பாளினியான மணிமேகலை சமீபத்தில் தான் புதிய பிஎம்டபிள்யூ காரை வாங்கியிருந்தார். தற்போது அவர் மீண்டும் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
தொகுப்பாளினியான மணிமேகலை மக்கள் மனதில் இடம் பிடித்து சின்னத்திரை பறவையாக வலம் வந்தார். தான் காதலித்து வந்த ஹூசைனை திருமணம் செய்த பின் பின் சின்னத்திரைக்கு சிறியதாக இடைவேளை விட்ட மணிமேகலை மீண்டும் குக் வித் கோமாளி மூலம் கம்பேக் கொடுத்து கலக்கி வருகிறார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்துடன் வெற்றி நடைபோடும் மணிமேகலை மற்ற குக் வித் கோமாளி பிரபலங்கள் போலவே யூ-டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
மணிமேகலை - ஹூசைன் தம்பதியர் சமீபத்தில் தான் சொகுசு கார் வகைகளில் ஒன்றான பிஎம்டபிள்யூ காரை வாங்கியிருந்தார். அந்த கார் வாங்கி சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் மணிமேகலையும் அவரது கணவரும் உசேனும் புதிதாக ஹூண்டாய் கார் ஒன்றை வாங்கியுள்ளனர். ஏற்கனவே தாங்கள் வைத்திருந்த சிறிய காரை கொடுத்துவிட்டு இந்த புது காரை வாங்கி உள்ளனர். இதை பார்க்கும் பலரும் 'அதுக்குள்ள இன்னொரு காரா... மாஸ் காட்டுறீங்களே' என கமெண்ட் அடித்து வருகின்றனர்.