போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா |
சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமார் தனது சகோதரியுடன் இருக்கும் படத்தை சமீபத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார் ஜனனி அசோக்குமார். ஜீ தமிழின் செம்பருத்தி சீரியல் டாப் ஹிட்டில் சென்று கொண்டிருந்த சமயத்தில் ஜனனி அந்த தொடரிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து மீண்டும் விஜய் டிவிக்கே வந்து விட்ட அவர், தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அடிக்கடி போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது முதன்முறையாக தனது சகோதரியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஜனனிக்கே டப் கொடுக்கும் அழகுடன் இருக்கும் அவரது தங்கையின் புகைப்படம் பலரையும் கவர்ந்துள்ளது. நெட்டிசன்கள் ஒருபடி மேலே போய் ஜனனியின் தங்கை யார்? என சீரியஸாக தேடி வருகிறார்கள்.