'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சின்னத்திரை நட்சத்திரங்கள் சித்து - ஷ்ரேயா அஞ்சன் ஜோடியின் திருமணம் கோலாகலமாக நடந்தது. சின்னத்திரையில் ஹீரோ ஹீரோயினாக ஜோடியாக நடிக்கும் நடிகர்கள் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்துகொள்வது மிகவும் சகஜமான விஷயமாக மாறியுள்ளது. அந்த லிஸ்ட்டில் சித்துவும், ஸ்ரேயா அஞ்சனும் இணைந்துள்ளனர். கலர்ஸ் தமிழின் திருமணம் சீரியலில் ஜோடியாக நடித்த அவர்கள் இருவரும் நிஜத்திலும் காதலிக்க தொடங்கினார்கள். அதை அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் செய்தனர்.
அண்மையில் அவர்களது மெஹந்தி விழா நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் பங்கேற்க சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் அவர்களது திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. சித்து - ஸ்ரேயா அஞ்சனின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த காதல் ஜோடிகளுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்துள்ளன.