ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்…இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி | 55 வயதான கேஜிஎப் நடிகர் புற்றுநோயால் மரணம் | பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! |

ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹிட் தொடர்களை மீண்டும் ஒளிபரப்ப விஜய் டிவி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு தொடர்களை உருவாக்கி ஒளிபரப்பி வருகின்றன. இருந்தாலும் சினிமாவில் சொல்வது போல் 'க்ளாசிக் ஹிட்' என்ற வரிசையில் பழைய தொடர்களில் சில என்றுமே ரசிகர்களின் பேவரைட்டாக இருந்து வருகின்றன. உதாரணத்திற்கு சித்தி, மெட்டி ஒலி, மதுர, சரவணன் மீனாட்சி போன்ற தொடர்கள் மக்களின் ஆல் டைம் பேவரைட்டாக திகழ்ந்து வருகின்றன.
அந்த வகையில் ஏற்கனவே மெட்டி ஒலி சீரியல் ஒளிபரப்பாகி வெற்றியும் பெற்றுள்ளது. ஜீ தமிழ் கூட கரண்ட் ஹிட் சீரியலான செம்பருத்தியின் பழைய எபிசோடுகளை மீண்டும் ஒளிபரப்ப ஆரம்பிந்துள்ளது. இதனையடுத்து விஜய் டிவியின் பழைய தொடர்கள் சிலவற்றை மறு ஒளிபரப்பு செய்யக்கோரி அந்த தொடர்களின் ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
இந்நிலையில் விஜய் டிவியில் ப்ரஜின் - பவானி ரெட்டி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த 'சின்னத் தம்பி' தொடர் மறு ஒளிபரப்பு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பவானி ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதையடுத்து சின்னத்தம்பி சீரியலின் சில காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனை டிஆர்பி அறுவடையாக்க முடிவு செய்துள்ள தொலைக்காட்சி நிறுவனம் 'சின்னத் தம்பி' தொடரை மீண்டும் ஒளிபரப்ப உள்ளது. ஆனால், இந்த ஒளிபரப்பு விஜய் டிவியில் அல்லாமல் அதன் மற்றொரு சேனலான விஜய் சூப்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் விஜய் சூப்பரில் படங்களுக்கு பதிலாக விஜய் டிவியின் க்ளாசிக் ஹிட் சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பப்படும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.