பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

அமரன் படத்தை அடுத்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23வது படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா, சிபி சக்ரவர்த்தி ஆகியோர் இயக்கும் படங்களிலும் அடுத்தடுத்து நடிக்கிறார். இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் 23வது படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்கள்.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படமும், கார்த்தியின் சர்தார் படமும் கடந்த 2023ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகின. இதில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் தோல்வியடைந்தது. ஆனால் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அவரது அமரன் படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதனால் இந்த செண்டிமெண்ட் காரணமாக சிவகார்த்திகேயனை வைத்து தற்போது தான் இயக்கியுள்ள அவரது 23வது படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.