கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு |
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'விடாமுயற்சி'. அடுத்த வாரம் பிப்ரவரி 6ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
இந்த வருடத்தின் முதல் பெரிய படமாக வெளியாக உள்ள இப்படத்தை தமிழகத்தில் உள்ள 90 சதவீத தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக டாப் நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது வேறு எந்தப் படமும் வெளியாகாது.
'விடாமுயற்சி' அடுத்த வாரம் வெளியானாலும் இந்த வாரமும், அடுத்த வாரத்திற்கு அடுத்த வாரமும் குறிப்பிடும்படியாக படங்கள் வெளியாகவில்லை. சுமார் 800 தியேட்டர்கள் வரை இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தைத் தமிழகம் முழுவதும் ரெட் ஜெயன்ட் வெளியிடுவதால் தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல் இருக்காது.
இந்த மாதம் வெளிவந்த படங்களில் 'மத கஜ ராஜா' மட்டுமே நன்றாக ஓடிய நிலையில் 'விடாமுயற்சி' இந்த வருடத்தின் பெரிய வசூலை ஆரம்பித்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.