சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார் வடிவேலு. இவரின் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சுராஜ் இயக்குகிறார். இப்படத்திற்கு நாய் சேகர் என பெயர் வைக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த பெயரில் சதீஷ் நடிக்க, ஒரு படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் வடிவேலு படத்திற்கு "நாய் சேகர் ரிட்டன்ஸ்" என பெயரிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இன்று வெளியிட்டுள்ளனர். நாய்கள் புடைசூழ வடிவேலு ஒய்யாரமாக ஸ்டைலாக அமர்ந்துள்ள போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.