அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
‛கட்டில்' படப்புகழ் கணேஷ்பாபு, தயாரித்து, இயக்கி, எழுதியுள்ள படம் ‛கருவறை'. ரித்விகா, மிதுன், அஞ்சனா தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹங்கேரியில் நடக்க உள்ள பேரடைஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்கான விருதுக்கு தேர்வாகியுள்ளது.
கணேஷ்பாபு பேட்டி: தாயின் கருவறையில் உள்ள பிறக்கப் போகும் தம்பிக்காக சிறுமி கதை சொல்லிக் கொண்டிருக்ககிறாள். தாயோ குடும்ப சூழல் காரணமாக கருவை கழிவறையில் கழுவி தள்ளுகிறாள். இப்படி ஒரு காட்சி கருவறை படத்திற்காக படமாக்கப்பட்டுள்ளது. இதில் கதை சொல்லும் சிறுமியாக நடித்த அஞ்சனா தமிழ்செல்வியும் கருவிலேயே களையப்பட இருந்தவர்.
கருக்கலைப்பை மையமாக கொண்ட இப்படத்தின் கதை என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. இன்று நம் நாட்டில், குழந்தையின்றி அவதிப்படும் லட்சக்கணக்கானோர் உள்ளனர் அதேவேளையில், குழந்தையை அநாயசமாக கலைக்கவும் செய்கின்றனர். கருக்கலைப்பு என்பது 10ல் 7 பேர் வாழ்க்கையில் நடந்துள்ள விஷயமாக உள்ளது. ஆனால் இதை யாரும் வெளிப்படையாக பேசுவதில்லை. கருக்கலைப்பால் உடல் மற்றும் மனரீதியாகவும் பலர் பாதிக்கின்றனர். இன்று வீட்டுக்கு வீடு, கருக்கலைப்பு பிரச்னை உள்ளது. ஆனால் அது வெளிப்படையாக பேசுவதில்லை' என்றார்.