ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

‛சித்திரம் பேசுதடி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகர் நரேன். அதன்பிறகு சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். காலப்போக்கில் பட வாய்ப்புகள் குறைந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக குணச்சித்ர கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்தார். அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‛கைதி' திரைப்படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரமும் அந்த படத்தின் வெற்றியும் அவரது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக துவக்கி வைத்தது. அதனை தொடர்ந்து கமலுடன் இணைந்து ‛விக்ரம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைத்தார் லோகேஷ் கனகராஜ்.
தற்போது தமிழ், மலையாளத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வரும் நரேன், விஜய் தனது கடைசி படமாக அறிவித்துள்ள ‛ஜனநாயகன்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் குறைவான நேரமே வந்து போகும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தாலும் படத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். மலையாளத்தில் விரைவில் இவரது நடிப்பில் வெளியாக உள்ள ‛சாகசம்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக இவர் அளித்த பேட்டியின் போது தான், ஜனநாயகன் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி கூறியுள்ளார் நரேன்.




