அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கமர்ஷியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கர். பொன்ராம் இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்வி சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன், ‛‛வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் வேண்டாம் என்பது என் கருத்து. அது ஜாலியாக எடுக்கப்பட்ட படம். அதேசமயம் ‛ரெமோ' படத்தில் வரும் நர்ஸ் கதாபாத்திரத்தை வைத்து வேண்டுமானால் ஒரு படம் இயக்கலாம்'' என கூறியிருந்தார்.
இந்நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை எடுத்தே தீருவோம் என இயக்குனர் பொன்ராம் கங்கணம் கட்டி நிற்கிறார். டுவிட்டரில் அவர் கூறுகையில், ‛சிவகார்த்திகேயன் வளர்ந்து விட்டார். வளர்ந்து வரும் இளம் நாயகனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் 2ம் பாகத்தை எடுத்தே தீருவோம். போட்றா வெடிய' எனக்கூறியுள்ளார்.