சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

சூர்யா தயாரிப்பில் அவரது மனைவி ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛உடன்பிறப்பே'. குடும்ப உறவுகளை பற்றி குறிப்பாக அண்ணனுக்கும், கணவனுக்கும் இடையில் மாட்டிக் கொண்ட பாசக்கார பெண்ணை பற்றிய கதையாக உருவாகி உள்ளது. ஜோதிகாவின் 50வது படமாக உருவாகி உள்ள இப்படத்தில் ஜோதிகாவின் கணவராக சமுத்திரகனியும், அண்ணனாக சசிகுமாரும் நடித்துள்ளனர். சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
சூர்யா பேசும்போது : 1998ல் தரமணி பிலிம்சிட்டியில் இயக்குனர் வசந்த் ஒரு பாறைக்கு அருகில் ஜோதிகாவை எனக்கு அறிமுகப்படுத்தினார். வேற ஊர், வேற மொழியை தாண்டி இங்கு வந்து நம்மூர் மொழியை கற்று, இந்த மக்கள் மனதுக்குள் அவர் இடம் பிடித்துள்ளார். அவர் ஏன் சில படங்கள் பண்ணினார், பண்ணவில்லை என தெரியவில்லை. வாழ்க்கையில் அவர் எடுக்கும் முடிவுகளை ஆச்சர்யமாக பார்க்கிறேன். ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நண்பனாக, கணவனாக ஜோ எனக்கு கிடைத்ததற்கு நன்றி. ஜோதிகாவின் 50வது படம் உடன்பிறப்பே. மொத்த படக்குழுவும் உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளனர். அழகான படம் படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள் என்றார் சூர்யா.




