'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடித்த 'லவ் ஸ்டோரி' படம் பத்து நாட்களுக்கு முன்பு செப்டம்பர் 24ம் தேதி வெளியானது. கடந்த பத்து நாட்களில் இப்படம் 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானாவில் 40 கோடி, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் 4 கோடி, வெளிநாடுகளில் 8 கோடி வசூலித்து மொத்தமாக 52 கோடியைக் கடந்துள்ளதாம். பங்குத் தொகையாக மட்டும் 25 கோடி வரை கிடைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
தனது நிஜ வாழக்கை லவ் ஸ்டோரி தோல்வியில் முடிந்தாலும், நாக சைதன்யாவுக்கு இந்தப் படம் பெரியதொரு வெற்றியையும், வசூலையும் பெற்றுத் தந்துள்ளது. சாய் பல்லவி தெலுங்கில் நடிக்கும் படங்கள் அவருக்கு நல்ல ராசியாக அமைந்து வெற்றிகரமான நாயகி என்ற பெயரை வாங்கித் தந்துள்ளது.
இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை ஆகியவையும் நல்ல விலைக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை இந்தப் படம் கொடுத்துள்ளது. கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு தெலுங்குத் திரையுலகிற்கு மட்டுமல்லாது, தென்னிந்தியத் திரையுலகிற்கம் இந்தப் படத்தின் வெற்றி முக்கியமானது என மகிழ்கிறார்கள் திரையுலகத்தினர்.