ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. கடந்த வருடம் கிரேன் விபத்து ஏற்பட்டதற்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவில்லை.
லைக்கா நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட நீதிமன்றம் வரை சென்றார்கள். பின்னர் தயாரிப்பாளர் சுபாஷ்கரனை சில வாரங்களுக்கு முன்பு ஷங்கர் சந்தித்துப் பேசி பிரச்சினைக்குத் தீர்வு கண்டார்கள் என தகவல் வெளியானது.
அதற்குள் ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்கப் போய்விட்டார் ஷங்கர். 'இந்தியன் 2' படத்தையும் மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று அவர் சொன்னதை பாலோ செய்யவில்லை எனத் தெரிகிறது.
எஞ்சியுள்ள காட்சிகளைப் படமாக்க ஷங்கர் தரப்பில் ஒரு பட்ஜெட்டைச் சொன்னார்களாம். அந்த பட்ஜெட், எவ்வளவு நாட்களில் படமாக்கம் என ஒரு அக்ரிமென்டில் எழுதி கையெழுத்துப் போட வேண்டும் என லைக்கா தரப்பில் ஷங்கரிடம் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு ஷங்கர் மறுப்பு தெரிவித்துவிட்டாராம். இந்தக் காரணத்தால் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவில்லை.
இப்போதுள்ள சூழ்நிலையில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் நடக்குமா என்பது சந்தேகமே என்கிறது கோலிவுட் தரப்பு. ஷங்கர் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை என்றால் லைக்கா தரப்பில் படத்தை 'டிராப்' செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார்கள்.