அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து சமந்தா திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்தது. இதற்கிடையில், நாகசைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளிவந்தன. இந்த சர்ச்சை முதன் முதலாக எழுந்த காரணம் நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் தன் பெயருக்கு பின்னால் இருந்த 'அக்கினேனி ' என்ற பெயரை நீக்கிவிட்டு தன் பெயரின் முதல் எழுத்தான வெறும் 'S' என்று மட்டும் வைத்து இருந்தார். அப்போதில் இருந்தே சமந்தா விவாகரத்து சர்ச்சை வைரலானது.
மேலும், வரும் அக்டோபர் 7 ஆம் தேதி நாக சைதன்யா - சமந்தா ஜோடி தங்களின் நான்காவது திருமண நாளை கொண்டாட இருந்த நிலையில் சமந்தா - நாகசைதன்யா இருவரும் விவகாரத்து செய்தியை அறிவித்து அதிர்ச்சி அளித்தனர். இந்த நிலையில் விவாகரத்து பின்னர் சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் மீண்டும் தனது பெயரை ,மாற்றி 'சமந்தா ' என்று தன் பெயரையே வைத்து உள்ளார்.