'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
நீண்ட ஆலோசனைக்கு பிறகு கணவன், மனைவியாக உள்ள நாங்கள் பிரிகிறோம் என நடிகை சமந்தாவும், நடிகர் நாகசைதன்யாவும் அறிவித்துள்ளனர்.
சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்த நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். நான்கு வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவரும் பிரிய போவதாக செய்திகள் பரவின. இதற்கு ஆரம்ப புள்ளியாக திருமணத்திற்கு பின் சமூகவலைதளத்தில் தனது பெயரை சமந்தா அக்கினேனி என மாற்றிய சமந்தா சில வாரங்களுக்கு முன் ‛எஸ் என்று மட்டும் மாற்றினார். அப்போதே இவர்கள் பிரிவதாக பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து சமந்தா தனித்து சுற்றுலா சென்றது, நாகசைதன்யா பட விழாவில் பங்கேற்காதது, அவருக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்காமல் சாய் பல்லவிக்கு வாழ்த்து தெரிவித்தது, ஹிந்தி நடிகர் அமீர்கானுக்கு நாகர்ஜூனா வைத்த விருந்தில் பங்கேற்காதது என அடுத்தடுத்த நிகழ்வுகள் இவர்கள் பிரிவதை உறுதி செய்வதாகவே அமைந்தது. ஆனால் இதுப்பற்றி நேரடியாக இருவரும் எதுவும் கருத்து கூறாமல் இருந்தனர்.
இந்நிலையில் சமந்தா, நாகசைதன்யா இருவரும் தாங்கள் பிரிவதாக ஒரே மாதிரியான பதிவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர். அதில், ‛‛நீண்ட ஆலோசனைக்குக்குப் பிறகு கணவன் மனைவியாக உள்ள நானும் சமந்தாவும், (நானும், நாகசைதன்யாவும்) பிரிந்து தனித்து செல்ல முடிவு செய்துள்ளோம். 10 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக இருப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த கடினமான நேரத்தில் நண்பர்கள், நலம் விரும்பிகள், பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் எங்களின் தனிப்பட்ட விஷயத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு இருவரும் பதிவிட்டுள்ளனர்.