அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைக்கும் படங்கள் குறித்த அப்டேட்களை அவ்வப்போது கொடுத்து வருகிறார். இந்தநிலையில் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவரிடத்தில், சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் விஜய்யின் மாஸ்டர் படத்தைப்போன்று ஆங்கில பாடல் உள்ளதா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அப்படி எதுவும் இல்லை என்று கூறியுள்ள அனிருத், அப்படியொரு பாடலுக்குரிய சூழல் மாஸ்டர் படத்தில் இருந்ததால் மட்டுமே ஆங்கில பாடல் இடம் பெற்றது. கதைக்களம் தான் அதுபோன்ற சூழலை உருவாக்குகின்றன என்று கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்திற்கான இசைப்பணிகளை முடித்து விட்டீர்களா? என்று ரசிகர்கள் கேட்டபோது, அதற்கு பதில் சொல்ல மறுத்த அனிருத், அதுகுறித்து நான் எதுவும் சொல்லக்கூடாது. சம்பந்தப்பட்ட பட நிறுவனம் தெரிவிப்பார்கள். பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும். அதுவரை பொறுத்திருங்கள் என்று சொல்லி அந்த கேள்விக்கு பதில் கொடுக்காமல் எஸ்கேப்பாகி விட்டார் அனிருத்.