இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளான இன்று (அக்.,01) அவரை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசன், திரைப்படம் நடிக்க துவங்கும் முன், மேடை நாடகங்களில் நடித்து வந்தார். ‛சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை பாராட்டிய ஈ.வெ.ரா., அவரை ‛சிவாஜி கணேசன் என அழைத்தார். பிறகு அதுவே அவரது பெயராக நிலைத்தது. 1952ல் வெளிவந்த ‛பராசக்தி படம் மூலம் திரையுலகுக்குள் நுழைந்த அவர் 300க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள், 9 தெலுங்கு படம், இரண்டு ஹிந்தி படம், ஒரு மலையாள படத்திலும் நடித்துள்ளார்.
செவாலியர் பட்டம் பெற்ற முதல் இந்தியரான சிவாஜி கணேசன், கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷண் விருது, தாதா சாகேப் பால்கே விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். இவருடைய பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளான இன்று, அவரை கவுரவிக்கும் வகையில், உலகளவில் தேடுபொறியில் முன்னணி நிறுவனமாக திகழும் கூகுள், தனது இணையப்பக்கத்தில் சிவாஜி கணேசனுக்கு டூடுல் வெளியிட்டுள்ளது. நுபுர் ராஜேஷ் சோக்சி என்பவர் வடிவமைத்த இந்த டூடுலை திரையுலகினர் மட்டுமின்றி சினிமா ரசிகர்களும் வரவேற்றுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் மரியாதை
சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், சென்னை அடையாறில் உள்ள சிவாஜியின் மணிமண்டபத்துக்கு சென்றுமாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிவாஜியின் குடும்பத்தினரான ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். முதல்வர் வருகைக்கு பிரபு நன்றி தெரிவித்திருக்கிறார்.