சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
சசிகுமார் நடித்த, ‛சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் மீண்டும் சசிகுமார் உடன் இணைந்து இயக்கியுள்ள படம் ‛கொம்பு வச்ச சிங்கம்டா'. நாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க, முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடித்துள்ளார். இவர்களுடன் மறைந்த இயக்குனர் மகேந்திரனும் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியானது.
‛இப்பல்லாம எவன் முகத்தாயாவது பார்த்து நல்லவன், கெட்டவன் யாருனு சொல்லிரு பார்ப்போம், இங்க எல்லாரும் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க..., இனி இவனுங்களோடதான் நம்ம வாழ்ந்தாகனும்' என்ற இப்படத்தின் வசனம் ரசிகர்களால் கவரப்பட்டுள்ளது. ‛குத்துனது நண்பனா இருந்தா... செத்தா கூட சொல்லக்கூடாது' என்ற வசனத்தை ரசித்த ‛சுந்தரபாண்டியன்' ரசிகர்கள் கொம்புவச்ச சிங்கம்டா படத்தையும் வரவேற்பர் என்கின்றனர் படக்குழுவினர்.