அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் நாயகியாக நடிக்கும் பூஜா ஹெக்டே, இந்த படத்திற்கு முன்பு தெலுங்கில் ராதே ஷ்யாம், ஆச்சார்யா, மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர் மற்றும் சர்க்கஸ் ஹிந்தி படம் என நான்கு படங்களில் நடித்து வந்தார்.
இதனால் பீஸ்ட் படத்திற்கு மொத்தமாக கால்சீட் கொடுக்காமல் அவ்வப்போது நடித்து வந்த பூஜா ஹெக்டே, தற்போது அந்த நான்கு படங்களிலுமே நடித்து முடித்து விட்டார். அதனால் தற்போது சென்னை வந்து மீண்டும் பீஸ்ட் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். தொடர்ந்து பீஸ்ட் படத்தில் தான் நடிக்க வேண்டிய அனைத்து காட்சிகளையும் அக்டோபர் மாதத்திற்குள் முடித்துக் கொடுத்து விட்டு நவம்பரில் இருந்து மற்ற படங்களில் நடிக்க கால்சீட் கெடுத்துள்ளார்.
அந்த வகையில், பீஸ்ட் படத்திற்கு பிறகு நவம்பர் மாதம் முதல் திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படம், பவன் கல்யாணின் பாவதேயுடு பகத்சிங் போன்ற படங்களில் நடிக்க கால்சீட் கொடுத்துள்ளார் பூஜா ஹெக்டே.