ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் ஷெரின். தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன்பிறகு ஜெயா, ஸ்டூடன்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம் உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக 2011ம் ஆண்டு பூவா தலையா படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
தற்போது 10 வருடங்களுக்கு பிறகு ரஜினி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தயாரிப்பில் உருவாகி உள்ள படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி உள்ளார். விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். மற்றும் வனிதா, மூக்குத்தி முருகன், குக் வித் கோமாளி பாலா, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது: படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது தற்போது டப்பிங் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான படமாக இதை உருவாக்கி உள்ளேன். ரஜினி ரசிகரான விஜய் சத்யா தனது வாழ்வில் எதிர்பாராத விஷயமாக ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார். அது என்ன மாதிரியான சிக்கல்கள் அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.
அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்று நடித்துள்ளது. நான் இயக்கிய படங்களிலேயே இந்த படத்தில் தான் ஒரு மிருகத்தை நடிக்க வைத்திருக்கிறேன். அந்த நாய் வரும் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும், விஜய் சத்யா இந்த படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. அப்படி சிறப்பான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். என்றார்