10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

நெல்சன் இயக்கி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதையடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் தனது 66வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை அக்டோபர் 15-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே விஜய் - வெற்றிமாறன் இணையப்போவதாக ஒரு செய்தி வெளியாகி வரும் நிலையில் தற்போது அதுகுறித்து ஜி.வி.பிரகாஷ்குமார் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், விஜய்யும், வெற்றிமாறனும் இணையப் போகிறார்கள் என்கிற செய்தி வெளியானதும் எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. ஆனால் அதற்கான நேரம் தான் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன். என்றாலும் அடுத்த ஆண்டில் அவர்கள் கண்டிப்பாக இணைந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்பது போன்று தெரிவித்துள்ளார்.