இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
தமிழ்த் திரையுலகத்தின் டாப் ஹீரோக்களில் ஒருவர் விஜய். அவரது அப்பா எஸ்.ஏ சந்திரசேகரால் திரையுலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின் அவரது இயக்கத்தில் சில பல படங்களில் நடித்து அதன் மூலம்தான் ரசிகர்களின் மனதில் அந்தக் காலத்தில் இடம் பிடித்தார்.
சமீப காலமாக அரசியல் கட்சி விவகாரத்தால் விஜய்யும், அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகருக்கும் இடையில் பிரச்னை உருவாகி அது நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. சமீபத்தில் தான் இயக்கியுள்ள நான் கடவுள் இல்லை பட பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூட தனக்கும் மகனுக்கும் இடையே பிரச்னை இருக்கிறது. எந்தக் குடும்பத்தில்தான் பிரச்னை இல்லை என்று எஸ்ஏசி பேசியிருந்தார்.
இந்நிலையில் வாரப் பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், எஸ்ஏசியும், அவரது மனைவி ஷோபாவும் விஜய்யைப் பார்க்கச் சென்றதாகவும். கேட்டில் காத்திருந்த போது ஷோபாவை மட்டும் விஜய் வரச்சொன்னதாகவும் இடம் பெற்றிருந்தது. ஆனால், தான் அப்படி பேட்டியளிக்கவில்லை என்றும், அதற்கான உண்மையை விளக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “இன்றைய வார இதழ் ஒண்ணுல, என்னுடைய பேட்டி வந்திருக்குது. பேட்டி அழகா இருந்தது, எல்லாம் சொன்னதுலாம் வந்திருந்தது, நான் எப்பவுமே எதையுமே வெளிப்படையா பேசுவேன். என்னைப் பத்தி கேட்டிருந்தாங்க, என் படம் நான் கடவுள் இல்லை படத்தை பத்தி கேட்டிருந்தாங்க, விஜயகாந்த் பத்தி கேட்டாங்க, எல்லாத்தையும் ஓபனா சொல்லியிருந்தேன்.
அது போல என் குடும்பத்தைப் பத்தி கேக்கும் போது, நான் சொல்லாத ஒரு விஷயம் அதுல வந்திருந்தது. நானும் ஷோபாவும், விஜய் வீட்டுக்கு வெளியில கார்ல காத்திருந்ததாகவும், அவர் வந்து ஷோபாவை மட்டும் உள்ளே வரச் சொல்லுங்கன்னு சொன்னதாகவும், நாங்க இரண்டு பேருமே திரும்பி வந்துட்டதாகவும் அதுல ஒரு தவறான செய்தி வந்திருந்தது. அது உண்மையல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்பினேன், அதுதான் இது.
ஏன்னா, எனக்கும் விஜய்க்கும் பிரச்னை இருக்கிறது உண்மை, அது இல்லன்னு எப்பவுமே நான் மறுக்க மாட்டேன். இன்னைக்கு பிரச்னை இருக்கிறது உண்மை. மத்தபடி அவனும், அவன் தாயும், அதாவது அவனும், என் மனைவியும் எப்பவும் போல பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க, பேசிக்கிட்டுதான் இருக்காங்க, பழகிட்டுதான் இருக்காங்க. அவங்க ரெண்டு பேருக்குள்ள எந்த மனக்கசப்பும் இல்லை, சந்தோஷமாதான் இருந்திட்டிருக்காங்க.
அப்படியிருக்கும் போது, அவங்க கேட்டுல காத்திக்கிட்டிருந்ததாகவும் .............அப்படிங்கறது வந்து தவறு, தவறான விஷயத்தை அதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது தவறுன்னு சொல்ல வேண்டிய ஒரு கட்டாயத்துல நான் இருக்கிறதால இதை நான் பதிவு பண்றேன்,” என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.