படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் லிகர். விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, கெட்டப் ஶ்ரீனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்.
இந்த படத்தில் உலக மக்களால் வசீகரிக்கப்பட்ட, குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார். இந்திய படம் ஒன்றில் இவர் நடிப்பது இதுவே முதல்முறையாகும். படத்தில் இவர் அயர்ன் மைக் என்ற வேடத்தில் நடிக்கிறார். தீவிரமான ஆக்ஷன் கதையாக உருவாகும் இப்படத்தில் இவரது வரவு இன்னும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி என் பன்மொழி படமாக இந்த படம் உருவாகிறது.
இதுகுறித்து விஜய் தேவரகொண்டா டுவிட்டரில், “நாங்கள் கொடுத்த வாக்கை, நிறைவேற்ற துவங்கியுள்ளோம்”. இந்திய திரையுலகில் முதன்முறையாக, லிகர் படத்தில் இணையும் முக்கிய பிரபலம். இந்த பிரபஞ்சத்தின் சக்திமிக்க மனிதர், குத்து சண்டையின் கடவுள், லெஜண்ட், பீஸ்ட், காலத்தால் அழிக்கவியலா புகழ் கொண்ட நாயகன், மைக் டைசனை இந்திய திரையுலகிற்கு வரவேற்கிறோம். இன்னும் சில நாட்களுக்கு , உங்கள் ஆர்வத்தை கட்டுபடுத்தி வைத்துகொள்ளுங்கள். இந்தபடம் தியேட்டர்களில் வெளியாக தயாராகி கொண்டிருக்கிறது. கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்'' என பதிவிட்டுள்ளார்.