என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
விஜய்க்கும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்குமான பனிப்போர் தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய்க்கு அரசியல் ஆசை உண்டு. அதனால்தான் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அடிக்கடி மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை கூட்டி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆனாலும் அரசியலுக்கு வருவதற்கான சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார்.
ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு 70 வயதை தாண்டி விட்டதால் மகன் உடனே அரசியலுக்கு வந்து ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்கிற அவசரம். இதுதான் பிரச்சினைக்கு மூல காரணம். விஜய்யிடம் எந்த ஆலோசனையும் பெறாமல் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற முயற்சித்தது உள்பட பல விஷயங்களால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் தனது பெயரை, படத்தை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை நகர 5வது உரிமையியல் நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் எஸ்.ஏ.சந்திரசேகர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது. கடந்த பிப்ரவரியில் நடந்த பொதுகுழு கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தற்போது விஜய் ரசிகர் மன்றம் மட்டுமே செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை அக்டோபர் 29ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.