பேபி ஜான் - கவர்ச்சி புயலாக உருவெடுத்த கீர்த்தி சுரேஷ் | சீனாவில் மஹாராஜா ரிலீஸ் : முன்பதிவு எப்படி | காதல் படங்கள் குறைந்து விட்டது : கார்த்தி வருத்தம் | எனது சாதனைகள் தமிழ் மண்ணுக்கு சொந்தம் : அல்லு அர்ஜூன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: தெலுங்கில் 3 விருதுகளை வென்றாலும் தமிழில் அடிவாங்கிய கண்ணகி | பிளாஷ்பேக்: வெள்ளி விழா கொண்டாடிய புராண புனைவு கதை | சமந்தாவின் அபத்தமான, பயனற்ற செலவு என்ன தெரியுமா? | எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான் - காதலை உறுதி செய்த ராஷ்மிகா | கேம் சேஞ்சர் படத்திற்காக 15 கோடியில் படமாக்கப்பட்ட பிரம்மாண்ட பாடல் | பணி படம் பார்த்துவிட்டு ஜோஜூ ஜார்ஜை பாராட்டிய கமல் |
தமிழ் சினிமாவும், தெலுங்கு சினிமாவும் பல வருடங்களாக ஒன்றுக்கொன்று இணைந்தே செயல்பட்டு வருகிறது. இரண்டு மொழிப் படங்களுக்கும் பெரிய வித்தியாசங்களைப் பார்க்க முடியாது.
தமிழ் இயக்குனர்கள் தெலுங்கிலும், தெலுங்கு இயக்குனர்கள் தமிழிலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தெலுங்குத் திரையுலகத்தில் முக்கிய இயக்குனர்களாக இருக்கும் சேகர் கம்முலா, வம்சி பைடிப்பள்ளி இருவரும் அடுத்து தமிழ் நடிகர்களை வைத்து படங்களை இயக்க உள்ளார்கள்.
சேகர் இயக்கத்தில் தனுஷ், வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகிறார்கள். சேகர் - தனுஷ் கூட்டணி பற்றிய அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. வம்சி - விஜய் கூட்டணி பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த இரண்டு படங்களுமே பான்-இந்தியா படங்களாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் எனத் தெரிகிறது.
தெலுங்கு ஹீரோக்கள்தான் சமீப காலமாக பான்-இந்தியா படங்களாக நடித்து வருகிறார்கள். அதை தற்போது தனுஷ், விஜய் இருவரும் ஆரம்பித்து வைத்துவிட்டார்கள். அந்த வரிசையில் அடுத்து யார் தெலுங்கு இயக்குனருடன் இணையப் போகிறார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும்.
ஒரு படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானால் அதற்கு ஓடிடி உரிமையாக கணிசமான தொகை கிடைத்து விடுகிறது. அதனால்தான் பலரும் பான்-இந்தியா படங்கள் பக்கம் திரும்புகிறார்கள் எனத் தெரிவிக்கிறார்கள்.