பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தெலுங்குத் திரையுலகத்தில் கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு லவ் ஸ்டோரி படத்திற்குக் கிடைத்த வரவேற்பு தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடித்துள்ள அந்தப் படத்திற்கு பவன் இசையமைத்துள்ளார். இவர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தி வரும் இசைக் கல்லூரியில் படித்தவர்.
லவ் ஸ்டோரி படம் குறித்து இரண்டு தினங்களுக்கு முன்பு மகேஷ் பாபு டுவீட் செய்தது அந்தப் படத்திற்கு மேலும் வரவேற்பைக் கூட்டியுள்ளது. அவரது டுவீட்டில் இசையமைப்பாளர் பவன் பற்றி, “பவனிடமிருந்து இன்னும் பலவற்றைக் கேட்க உள்ளோம். என்ன ஒரு இசையமைப்பு, உணர்ச்சிமிக்க ஒன்று. அவர் ஏ.ஆர்.ரஹ்மானின் மாணவர் எனக் கேள்விப்பட்டேன். ரஹ்மான் சார், அவரைப் பற்றி நீங்கள் பெருமைப்படலாம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகேஷ்பாபுவின் டுவீட்டுக்கு ஏஆர் ரஹ்மான், “ஆமாம், அவர் மிகத் திறமை வாய்ந்தவர், பணிவானவர். எங்களது இசைக் கல்லூரியில் உள்ள அனைவரும் அவருடைய வெற்றிக்காக உண்மையில் பெருமைப்படுகிறோம், எல்லாப் புகழும் இறைவனுக்கே,” என பதிலளித்துள்ளார்.
லவ் ஸ்டோரி படத்தில் பவன் இசையமைத்துள்ள சாரங்க தரியா பாடல் யு டியுபில் ஏற்கெனவே, 328 மில்லியனைக் கடந்துள்ளது. படத்தில் உள்ள மற்ற பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி உள்ளன.