காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. 5-வது சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். 'பிக்பாஸ் 5' நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. கமல் 'இந்த வீட்டில் கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம் போல...' என்று பேசும் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புதிய ப்ரோமோவில் நடிகர் கமல்ஹாசன் ஒரு கண்ணாடி முன்பு போய் நின்று வீட்டிற்கு வருபவர்களை வரவேற்பது போல் ஒத்திகை செய்து பார்க்கிறார். “அடடே.. வாங்க வாங்க..” என்று பேசி பார்க்கிறார். இதையே பல விதமாக பேசி பார்க்கிறார்.
இறுதியாக அவரே, “ஏன் இப்படி எல்லாம் என்று கேட்கிறீர்களா? நான் நானாக இருப்பதற்கு முயற்சி செய்கிறேன். அதுவும் குறிப்பாக இந்த வீட்டில் நான் நானாக இருப்பது மிக கடினம்” என்று சொல்லிக் கொண்டே இருக்கும்போது யாரோ வீட்டுக்குள் வர, “அடடே.. வாங்க.. வாங்க” என்று சொல்லி முடிக்கிறார். இப்படியாக இந்த புரோமோ நிறைவடைகிறது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் வரும் அக்டோபர் 3ந் தேதி முதல் மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.