நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மாஸ்டர் படத்தை அடுத்து கமல் தயாரித்து, நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கிரைம் திரில்லர் கதையில் உருவாகி வரும் இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வந்தபோது கமல் சம்பந்தப் பட்ட காட்சிகளை படமாக்கினார் லோகேஷ் கனகராஜ்.
இந்தநிலையில் தற்போது விக்ரம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நேற்று முதல் சென்னையில் தொடங்கியுள்ளனர். இதில் தற்போது கமல் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் சில தினங்களில் கமலுடன், விஜய் சேதுபதி, பகத்பாசில் ஆகியோரும் கலந்து கொள்ளப் போகிறார்கள். அந்த வகையில் இந்த இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் கமலுடன் மற்ற நடிகர்கள் நடிக்கும் அதிகப்படியான காட்சிகளை படமாக்கி விடவும் திட்டமிட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.