இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் | ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி | பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி | பிளாஷ்பேக்: மின்னி மறைந்த ஸ்ரீராம் | ஹிந்தியில் படத்துக்கு வரவேற்பு: புனேவுக்கு நடிகர் தனுஷ் விசிட் | தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ | 10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' | 'மகாசேனா'வில் அம்மாவாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே |

இசை அமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ்குமார் நடிகராக மாறினார். ஆனால் இசையில் பெற்ற வெற்றியை நடிப்பில் பெற முடியவில்லை. ஜான் ஏறினால் முழும் சறுக்கிற பழமொழி அவருக்குத்தான் சரியாக பொருந்தும். கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சிவப்பு பச்சை மஞ்சள் என்ற படம்தான் கடைசியாக அவருக்கு கவனிக்கத் தக்க படமாக அமைந்தது.
அவர் நடித்து முடித்துள்ள ஐங்கரன், ஜெயில், அடங்காதே, 4ஜி, பேச்சுலர், ஆயிரம் ஜென்மங்கள் படங்கள் வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. காதலை தேடி நித்யானந்தா, காதலிக்க யாருமில்லை படங்கள் கைவசம் இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள செல்பி படம் வெளிவரும் முயற்சியில் இருக்கிறது. வர்ஷா பொல்லம்மா ஹீரோயினாக நடித்திருக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை டிஜி பிலிம் கம்பெனி நிறுவனம் தயாரித்துள்ளது. கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். இந்த படம் ஜி.பி.பிரகாசுக்கு திருப்பம் தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




