அடேங்கப்பா... 800 தியேட்டர்களில் வெளியாகும் 'தி லெஜண்ட்' | மீண்டும் பட தயாரிப்பில் களமிறங்கும் தனுஷ் | உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி” | சிரஞ்சீவி பெயரில் தவறு செய்த 'காட்பாதர்' குழு | டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார் : அமெரிக்காவில் ஒரு மாதம் ஓய்வு | சமந்தாவின் இன்ஸ்டா முடக்கப்பட்டதா? | வெந்து தணிந்தது காடு - இசை விழா ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது | பொன்னியின் செல்வன் - நந்தினியாக ஐஸ்வர்யா ராய் | 'தி கிரேமேன்' - பட புரொமோஷனுக்காக ஹாலிவுட் பறந்த தனுஷ் | விஜய்யின் வாரிசு - பிரெஞ்சு படத்தின் தழுவலா? |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தாணு தயாரிப்பில், தனுஷ் நடித்த கர்ணன் படம் திரையரங்குகளில் கடந்த ஏப்ரல் 9ஆம்தேதி திரையிடப்பட்டது. நல்ல வசூலையும், வரவேற்பையும் பெற்றது. பின்னர் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு அங்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றது.
கடந்த சுதந்திர தினத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 9.4 டி.ஆர்.பி. ரேட்டிங் பெற்றது. தற்போது உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஜெர்மனி நாட்டில் பிராங்க்பர்ட் நகரில் வருகிற அக்டோபர் மாதம் 12,13,14 தேதிகளில் நடக்கவிருக்கும் நியூ ஜெனரேஷன் இண்டிபண்டன்ட் இண்டியன் பிலிம் பெஸ்டிவல் விழாவில் திரையிடப்படுகிறது.