'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
தெலுங்கு நடிகர் சங்கத்திற்கு அடுத்த மாதம் 10ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் பிரகாஷ்ராஜும், மோகன் பாபுவின் மகனும் தெலுங்கு நடிகருமான விஷ்ணு மஞ்சுவும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை ஜீவிதா, பிரகாஷ்ராஜ் அணிக்கு தாவி அந்த அணியின் சார்பில் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
தற்போது தேர்தல் சூடுபிடித்து வருகிறது. பிரகாஷ்ராஜ் கன்னடர், அவர் தெலுங்கு நடிகர் சங்கத் தலைவர் ஆககூடாது என்று ஒரு பக்கம் பிரச்சாரம் நடந்து வருகிறது. விஷ்ணு மஞ்சு அணிக்கு என்.டி.ஆர் குடும்பமும், பிரகாஷ்ராஜூக்கு சிரஞ்சீவி குடும்பமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது ஆதரவாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்திய பிரகாஷ்ராஜ் தான் வெற்றி பெற்றால் தெலுங்கு நடிகர் சங்கத்திற்கு 10 கோடி நன்கொடை தருவதாக கூறியதாக தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து விஷ்ணு மஞ்சு அணியினர் வாக்களிக்கும் தகுதி படைத்த உறுப்பினர்களுக்கு கணிசமான பணம் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பிரகாஷ்ராஜ் கொரோனா விதிமுறைகளை மீறி விருந்து நிகழ்ச்சி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரகாஷ்ராஜ் "கொரோனா விதிமுறைகளை பின்பற்றிதான் ஆலோசனை கூட்டம் நடத்தினேன். விருந்து நிகழ்ச்சி எதுவும் நடத்தவில்லை. அரசியல் கட்சிகள் கொரோனா விதிமுறைகளை மீறி மக்களை கூட்டி நிகழ்ச்சி நடத்துவது பற்றி கேள்வி கேட்டால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.