நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தென்னிந்திய அளவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு படங்களிலும் நடித்து வருகிறார். அது மட்டுமல்ல பெண்களின் அழகு சாதன பொருட்களுக்காக '9 ஸ்கின்' என்கிற ஒரு சரும பராமரிப்பு நிறுவனத்தையும் துவங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாக லேட்டஸ்ட்டாக 'ஸ்கின்ட்ரெல்லா' என்கிற ஒரு புராடக்ட்-ஐ சமீபத்தில் மும்பையில் விழா ஒன்றை நடத்தி அறிமுகப்படுத்தினார் நயன்தாரா.
இந்த நிகழ்வின் போது கீழே நின்ற மூன்று பெண்கள் தன்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பி அதே சமயம் தயக்கத்துடன் நிற்பதை கவனித்த நயன்தாரா உடனடியாக விழா ஏற்பாட்டாளர் ஒருவரை அழைத்து அவர்கள் மூவரையும் கைகாட்டி மேடைக்கு அழைத்து வரச் சொன்னார். அப்படி வந்த மூன்று பெண்களுடன் சேர்ந்து செல்பியும் எடுத்துக் கொண்டார் நயன்தாரா. இப்படி நயன்தாரா தங்களைக் கவனித்து மேடைக்கு வரவழைத்து புகைப்படம் எடுப்பார் என எதிர்பாராத இந்த மூன்று பெண்களும் மகிழ்ச்சியுடன் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சென்றனர்.