தொடர்ந்து குத்து பாடல் வாய்ப்பு - மறுக்கும் தமன்னா | உண்மையிலேயே பஹத் பாசிலுக்கு தான் அந்த தைரியம் உண்டு : நடிகை ஊர்வசி புகழாரம் | கமலுக்கான கதையை மோகன்லால் - மம்முட்டி படத்திற்கு பயன்படுத்தவில்லை : இயக்குனர் விளக்கம் | மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | பெஞ்சல் புயல் : ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் | சூர்யா 45வது பட படப்பிடிப்பில் இணைந்தார் த்ரிஷா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம் | 'ஒரு பெண் போல சண்டை செய்' - சமந்தாவின் பதிவு யாருக்காக? | தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த 'அமரன்' | புஷ்பா 2 பட குழுவுக்கு நன்றி தெரிவித்த சாம் சி.எஸ் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்து அரசியல் கட்சி ஆரம்பித்து தோல்விகளை சந்தித்தவர் பவன் கல்யாண். இந்த ஆண்டு நடந்த ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் அவரது ஜனசேனா கட்சி பெரும் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு பவன் கல்யாணும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திர மாநில துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
துணை முதல்வராதவற்கு முன்பாக அவர் நடித்து வந்த சில படங்களின் படப்பிடிப்புகள் அப்படியே நின்று போனது. அதில் தற்போது 'ஹரிஹர வீர மல்லு' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட பின் செல்பி ஒன்றை எடுத்து, “பரபரப்பான அரசியல் வேலைகளுக்கு நடுவே கடைசியாக நீண்ட நாட்களாக காத்திருந்த வேலையில் சில மணி நேரங்கள் தர முடிந்தது, ஹரிஹர வீரமல்லு,” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நேற்று படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாவதை முன்னிட்டு படத்தின் இயக்குனர் ஜோதி கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் ஆகியோர் விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனக துர்கா கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினர்.