3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? | ஓடிடி.,யில் விலை போகாத 'கேங்கர்ஸ்' | வேலை நாட்களில் எடுபடாத விஜய்யின் சச்சின் | கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! |
ரம்யா பாண்டியன், வாணிபோஜன் நடித்துள்ள, ராமன் ஆண்டாலும் ராவனே ஆண்டாலும் படத்தை சூர்யா தயாரித்துள்ளார். செப். 24ல் அமேசான் தளத்தில் இப்படம் வெளியாகிறது. அரிசில் மூர்த்தி இயக்கியுள்ளார். சாதாரண ஏழை குடும்பத்தில் ஆசையாக வளர்க்கப்படும் இரண்டு மாடுகள் திடீரென காணாமல் போகிறது. அதன் பின் நடக்கும் சம்பவங்களை கிராமத்து வாழ்வியலோடு, நையாண்டி கலந்து கூறியுள்ளனர்.
ரம்யா பாண்டியன் பேட்டி: மிகவும் யதார்த்தமான படம். மேக்கப்பே இல்லாமல் நடித்துள்ளேன். என்னை அழகாக காட்டியுள்ளனர். தமிழ் பேசும் நடிகை என்பதாலேயே எனக்கு இந்த வாய்ப்பை இயக்குனர் வழங்கினார். தமிழ் நடிகை என்பதாலேயே வாய்ப்பு கிடைப்பதில்லையா என்பது தெரியவில்லை. ஒன்றிரண்டு படத்தில் நடித்தாலும் மக்கள் மனதில் பதியும்படி நடிக்க வேண்டும். இப்படத்தில் எனக்கு ஜோடியாக புதுமுகம் மிதுன் நடிக்கிறார். இதில் முத்தக்காட்சியும் உண்டு. ஆனால், நான் வளர்த்த மாடுகளுடன் மட்டுமே. இப்படத்திற்காக மாடுகளுடன் பழகவும் வேண்டிஇருந்தது. படப்பிடிப்பு நடந்த இடம் கடினமாக இருந்தாலும், மொத்த படக்குழுவுடன் பயணித்த அனுபவம் இனிமையானது.
இவ்வாறு அவர் கூறினார்.