5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தர்பார் படத்தில் போலீசாக நடித்த ரஜினி, தற்போது சிறுத்தை சிவா இயக்கியுள்ள அண்ணாத்த படத்தில் விவசாயியாக நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்குப்பிறகு கிராமத்து கதையில் ரஜினி நடித்துள்ள இந்த படம் விவசாய குடும்பத்தில் நடக்கும் பிரச்னையை மையப்படுத்தி உருவாகியிருப்பதால் விஸ்வாசம் படத்தைப்போலவே இந்தபடமும் மெகா ஹிட் அடிக்கும் என்று தனது எதிர்பார்பபை வெளிப்படுத்தி வருகிறார் சிறுத்தை சிவா.
இந்த நிலையில் தீபாவளிக்கு அண்ணாத்த வெளியாக உள்ள நிலையில், அதையடுத்து ரஜினி நடிக்கும் 170வது படத்தை இயக்கப்போவது யார் என்கிற கேள்விகள எழுந்துள்ளது. ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ், தேசிங்கு பெரியசாமி ஆகியோர்களின் பெயர் அடிபட்ட நிலையில் தற்போது தனுஷ் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கப்போவதாக இன்னொரு தகவல் போயஸ் கார்டன் வட்டாரங்களில் கசிந்துள்ளது. இதற்கு முன்பு ரஜினி நடித்த காலா படத்தை தயாரித்த தனுஷ், இந்த படத்தை இயக்கப்போகிறாராம். ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா, செளந்தர்யா இருவரும் இப்படத்தை தயாரிக்கிறார்களாம்.
ராஜ்கிரண் நடித்த பவர்பாண்டி என்ற படத்தை ஹிட் படமாக கொடுத்து டைரக்டராகவும் தன்னை தனுஷ் நிரூபித்திரு ப்பதால் இந்த வாய்ப்பினை அவருக்கு வழங்குகிறாராம் ரஜினி. இப்படம் குறித்த தகவல்கள் அண்ணாத்த ரிலீசுக்கு பிறகு வெளியாகும் என்று கூறப்படுகிறது.