சசிகுமாரின் 'மை லார்ட்' படம் பிப்ரவரி 13ல் ரிலீஸ் | நடிகர் ரகுநாத் மாரடைப்பால் காலமானார் | மீண்டும் தாத்தாவான நடிகர் சிரஞ்சீவி! | சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! | 'அசுரன்' பட பாடலுக்கு கிடைத்த விருது: ஜி.வி.பிரகாசுக்கு நன்றி சொன்ன பாடகி சைந்தவி! | மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்? | சூர்யாவின் 'கர்ணா' கைவிடவில்லை! - இயக்குனர் தகவல் | 94வது வயதில் 61வது படத்தை அறிவித்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்! | '7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்து பகிர்ந்த அனஸ்வரா ராஜன்! | இயக்குனராக மாறும் பிரபல எழுத்தாளர்! |

சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இந்தாண்டு பொங்கலுக்கே வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. கொரோனா தாக்கம் ஓரளவு குறைந்த பிறகு மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு துவங்கியது.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 10) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் காலை 11 மணிக்கும், மோஷன் போஸ்டர் மாலை 6 மணிக்கும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.