தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா |
லத்திகா, ஆனந்த தொல்லை படங்களில் நாயகனாக நடித்த டாக்டர் சீனிவாசன் என்கிற பவர் ஸ்டார் தற்போது சந்தானம் தயாரித்து நடிக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார். இதையடுத்து தான் இயக்கி வரும் ஐ படத்திலும் பவர் ஸ்டாருக்கு ஒரு காமெடி வேடம் கொடுத்திருக்கிறார் டைரக்டர் ஷங்கர். இந்த படத்திலும் சந்தானத்துடன் இணைந்து காமெடியனாக படம் முழுக்க வருகிறாராம் பவர் ஸ்டார்.
இவர், தான் ஒரு சின்ன விசயம் செய்தாலும் அதை, பேனை பெருமாளாக ஆக்கிற கதையாய் சென்னை முழுக்க போஸ்டர் அடித்து பிரபலப்படுத்திக்கொள்வார். அதனால் தனது படத்தில் அவருக்கு கொடுத்திருக்கும் கேரக்டர் பற்றியும் அவர் ஊர் முழுக்க டமாரமடித்து விடக்கூடாது என்று, எக்காரணம் கொண்டு இந்த படத்தில் நீங்கள் நடித்திருக்கும் கேரக்டர் பற்றி வெளியில் மூச் விடக்கூடாது என்று அதிரடி கண்டிசன் போட்டுள்ளார் ஷங்கர். மீறி ஒரு சின்ன விசயம் ஐ படத்தைப்பற்றி கசிந்தாலும் மறுகணமே உங்களை படத்திலிருந்தே தூக்கி விடுவேன். நீங்கள் நடித்த காட்சிகளையும் வெட்டி எறிந்து விடுவேன் என்று எச்சரித்துள்ளாராம். இதனால், ஐ படத்தைப்பற்றி யாராவது பவர் ஸ்டாரிடம் வாய் திறந்தாலே, வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிக்கொள்கிறாராம் பில்டப் மன்னன்.