கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
இன்று தனது 70வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார் மலையாள சினிமாவின் மெகாஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் மம்முட்டி. பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன், அவருடனான தங்களது இனிய அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் பிரபல மலையாள இயக்குனரும் மம்முட்டியை வைத்து சுமார் நாற்பது படங்கள் வரை இயக்கியவருமான இயக்குனர் ஜோஷி, மம்முட்டி குறித்து சில சுவாரஷ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
“மம்முட்டி என் குடும்பத்தில் ஒருவர் போல.. நானும் அப்படித்தான்.. எனது மகள் விபத்தில் சிக்கி இறந்த சமயத்தில், தினசரி எனது வீட்டுக்கு வந்து ஆறுதல் சொல்வார். அதுமட்டுமல்ல, அந்த சமயத்தில் காலையில் எனது வீட்டுக்கே வந்து படப்பிடிப்புக்கு அழைத்து செல்வதுடன், இரவு தனது காரிலேயே என்னை வீட்டில் இறக்கிவிட்டுத்தான் அவரது வீட்டிற்கே செல்வார்.. ஒருநாள், இரண்டு நாள் அல்ல, ஒரு மாதத்திற்கும் மேல் இது தொடர்ந்தது. இப்படி ஒருவரை நண்பராக அடைந்ததற்கு பாக்கியம் செய்திருக்கிறேன் என்றே சொல்லவேண்டும்.
மம்முட்டி, தமிழில் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் அவருக்கு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்து தளபதி படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. 1990ல் சென்னையில் எனது டைரக்சனில் குட்டேட்டன் என்கிற படப்பிடிப்பில் அவர் நடித்த சமயத்தில், மம்முட்டியை வந்து சந்தித்த மணிரத்னம் தளபதி படத்தில் நடிக்கும்படி கேட்டார். ஆனால் மம்முட்டி அவரிடம் நான் நடிக்கவில்லை என சொல்லி அனுப்பிவிட்டார்.
அன்றிரவு அவரிடம் பேசிய நான், இப்போது சென்னை, கோவை போன்ற சில ஊர்களில் உள்ள ரசிகர்களுக்குத்தான் உங்களை ஓரளவுக்கு தெரியும்,.. ஆனால் மணிரத்னம் இயக்கத்தில் அதுவும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும்போது கிராமத்தில் உள்ள ரசிகர்களிடமும் எளிதாக ரீச் ஆகி விடுவீர்கள். இது நல்ல வாய்ப்பு, மறுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டேன்.. மறுநாளே மணிரத்னத்தை அழைத்து நடிப்பதற்கு சம்மதம் சொன்னார் மம்முட்டி. இப்படி நானும் அவரும் சில முக்கியமான விஷயங்களில் ஒருவருக்கொருவர் ஆலோசனைகளை பரிமாறிக்கொள்வதையும் எந்த ஈகோ இல்லாமல் அதை ஏற்றுக்கொள்வதையும் இப்போது வரை தொடர்ந்து வருகிறோம்” என கூறியுள்ளார் இயக்குனர் ஜோஷி.