'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கன்னடத்தில் தயாராகி வரும் படம் விக்ராந்த் ரோணா. கிச்சா சுதீப், நிரூப் பந்தாரி, நீட்டா அசோக், ஜாக்குலின் பெர்ணாண்டஸ், உள்பட பலர் நடிக்கிறார்கள். அனூப் பண்டாரி இயக்குகிறார், ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரிக்கிறார்கள்.
சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் பேண்டஸி த்ரில்லர் வகை படமாகும். பல வருடங்களுக்கு பிறகு கன்னடத்தில் உருவாகும் 3டி தொழில்நுட்ப படம். கன்னடம் தவிர்த்து 14 மொழிகளில் வெளியாகிறது. படத்தின் 3டி பணிகளுக்கென்றே பல கோடி செலவு செய்கிறார்கள்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் அனூப் பண்டாரி கூறியதாவது: விக்ராந்த் ரோணா ஒரு மர்மம் நிறைந்த கதாபாத்திரம். இந்த திரைப்படத்தை உருவாக்கும் போது, இது மிகப்பெரியபாத்திரம் என்பதை புரிந்து கொண்டேன். சுதீப் சார் இதில் கதாநாயகனாக வந்த பிறகு, அப்பாத்திரத்தின் பலம் இன்னும் அதிகமாகிவிட்டது. இப்படம் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். என்றார்.