லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தடம், தாராள பிரபு படங்களில் நடித்தவர் தான்யா ஹோப். தற்போது குலசாமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு மற்றம் கன்னட படங்களில் நடித்து வருகிறார். பெங்களூருவில் வசித்து வரும் தன்யா ஹோப் சமூக பணியில் ஈடுபாடு கொண்டவர். பல்வேறு மக்கள் பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார். கொரோனா காலம் நீடிப்பதால் எளிய மக்களின் பசியை போக்கும்விதமாக உணவளித்து வருகிறார்.
இதற்காக மாதம் ஒரு கிராமத்தை தேர்வு செய்து அந்த அந்த கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் சராசரியாக தினமும் 200 நபர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறார். ஷைன் சில்டரன் ஹோம் என்ற தொண்டு நிறுவனத்துக்கு ஒவ்வொரு மாதமும் பொருளாதார ரீதியாகவும் பக்கபலமாக இருக்கிறார். தான்யா ஹோப்பின் இந்த சேவைக்கு பல்வேறு தரப்பிடமிருந்து பாராட்டு குவிந்துள்ளது