'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 'அண்ணாத்த'. கிராம பின்னணிக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இமான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தின் டீசர் மற்றும் புதிய அப்டேட்டுகளை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில் 'அண்ணாத்த' படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் படத்தை ஜினிகாந்த் ல நாட்களுக்கு முன்பு பார்த்துள்ளார். படம் பார்த்த பிறகு படக்குழுவினரிடம் பேசிய அவர், எல்லாரையும் இந்த படம் உணர்வுபூர்வமாக இணைத்துவிடும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த படமாக இருக்கும் என்று கூறினாராம். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.