'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த 'மாறன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். அடுத்து மித்ரன் ஜவஹர் இயக்கி வரும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்க உள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் புதுச்சேரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று உள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்து, வைரலாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இருந்து நடன காட்சிகள் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது தனுஷ் படத்தின் காட்சிகளும் கசிந்திருப்பதால் திரைத்துறையினர் கவலை கொண்டுள்ளனர்.