நான் ஏன் பிறந்தேன், தம்பிக்கு எந்த ஊரு, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள் | 'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் |
கன்னட சினிமாவின் இளம் நடிகரும், நடிகர் அர்ஜூனின் உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் திடீர் மாரடைப்பால் இறந்தார். அவரின் மரணம் குடும்பத்தினரை மட்டுமல்லாது, திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மனைவி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை தான். காதல் சொல்ல வந்தேன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சிரஞ்சீவி சார்ஜா இறந்த சமயத்தில் மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு பெயர்சூட்டு விழா பெங்களூரில் நடைபெற்றது. குழந்தைக்கு ராயன் ராஜ் சார்ஜா என்று பெயர் வைத்துள்ளனர். நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை மேக்னா ராஜ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.பெயர்சூட்டு விழாவில் நடிகை நஸ்ரியா கலந்து கொண்டார். நஸ்ரியாவும், மேக்னாவும் நெருங்கிய தோழிகள். மேக்னாவுக்கு குழந்தை பிறந்தபோது தன் கணவர் பஹத் பாசிலுடன் மருத்துவமனைக்கு வந்தார் நஸ்ரியா.
பெயர்சூட்டு விழாவில் சிரஞ்சீவியும், மேக்னாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. மேலும் பழைய வீடியோக்களை வெளியிட்டனர். தன் குழந்தைக்கு பெயர் வைப்பதை பார்க்க கணவர் உயிருடன் இல்லையே என்பதை நினைத்து மேக்னா கண்கலங்கிவிட்டார். மறைந்த சிரஞ்சீவியே மகனாக பிறந்திருப்பதாக அவரின் குடும்பத்தினர் அனைவரும் கருதுகிறார்கள்.