கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் |
கொம்பன் படத்தை அடுத்து முத்தையா இயக்கும் விருமன் படத்தில் நடிக்கிறார் கார்த்தி. கிராமத்து கதையில் உருவாகும் இப்படத்தில் கொம்பன் படத்தில் நடித்த ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, நடிக்க அதிதி ஷங்கர் நாயகியாக அறிமுகமாகிறார். ஏற்கனவே கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தை தயாரித்த சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இந்த விருமன் படத்தை தயாரிக்கிறது. இந்த மாதம் 18-ந்தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்குகிறது.
இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாக உள்ள அதிதி, இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அதிதி இடம் பெற்றுள்ள போஸ்டரை வெளியிட்ட சூர்யா, அதிதி ஷங்கருக்கு மிகவும் அன்பான வரவேற்பு. நீங்கள் அனைவரது இதயத்தையும் வெல்லப் போகிறீர்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும். உன் வரவு நல்வரவு ஆகுக என்று அவரை வாழ்த்தியுள்ளார்.
ஷங்கரும் தனது மகளை அறிமுகம் செய்வதற்காக சூர்யா- ஜோதிகா ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், சூர்யா மற்றும் ஜோதிகா எப்போதுமே தரமான படங்களை வழங்கி வருகிறார்கள். கார்த்தி, முத்தையா, யுவன் சங்கர் ராஜா மற்றும் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.