விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‛க/பெ ரணசிங்கம்' படத்தை இயக்கியவர் விருமாண்டி. இந்தப்படம் ஓரளவுக்கு பாராட்டுகளை பெற்றது. அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்குவது பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் விமல் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சிங்கம் புலி நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை நடந்துள்ளது. மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் இந்தப்படமும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையில் தயாராகிறது.
விருமாண்டி படத்தில் நடிப்பது குறித்து விமல் கூறுகையில், ‛‛நம் மண்ணின் கலைஞன் க/பெ ரணசிங்கம்' இயக்குனர் அன்பு பங்காளி விருமாண்டி அவர்களோடு பணிபுரிய போவது மட்டற்ற மகிழ்ச்சி'' என தெரிவித்துள்ளார்.