ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

‛கொம்பன்' படத்திற்கு பின் மீண்டும் நடிகர் கார்த்தி - இயக்குனர் முத்தையா கூட்டணியில் கடந்தவாரம் வெளிவந்துள்ள படம் ‛விருமன்'. இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமானார். முத்தையாவின் முந்தைய படங்களின் சாயல் இருந்தாலும் குடும்ப படமாக இருப்பதால் படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. வசூலும் சிறப்பாக உள்ளது. தொடர்ந்து இரண்டாவது வாரமாக 400 தியேட்டர்களில் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது. விருமன் பட வெற்றியால் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். சமீபத்தில் சக்சஸ் கொண்டாட்டம் நடந்தது.
இந்நிலையில் விருமன் பட வெற்றியை கார்த்தி, முத்தையா, சூரி, அதிதி உள்ளிட்டோர் மதுரையில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
பின்னர் ரசிகர்களிடம் பேசிய கார்த்தி : இங்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது, சென்னையில் கூட வெற்றியை கொண்டாவில்லை, இங்கு வந்து கொண்டாடினால் திருப்தி என்பதால் மதுரைக்கு வந்துள்ளோம். பருத்திவீரனுக்கு பின்னர் லோக்கலா இது போன்ற படத்தில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றியையும் பெற்று தந்துள்ளது. மதுரை ரசிகர்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. திரையரங்குகளுக்கு பொதுமக்கள் வருகை தர தொடங்கியுள்ளனர் என்பது விருமன் வெற்றி காட்டியுள்ளது, ரசிகர்களின் அன்புதான் எங்கள் உயிர். விருமன் படத்தை வெற்றியடை செய்த ரசிகர்களுக்கும், திரையரங்கு நிர்வாகிகளுக்கும் ஊழியர்களுக்கும் நன்றி என்றார்.




