சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக கொஞ்சும் தமிழ் பேசி, தமிழ்நாட்டில் ரியாலிட்டி ஷோவில் தமிழ் மக்களை அழகால் கவர்ந்து, பார்ப்பவர்கள் எல்லாம் ‛லவ்லி' என சொல்லும் லாஸ்லியா மனம் திறக்கிறார்..
'பிரண்ட்ஷிப்' கேரக்டர், முதல்முறை கேமரா முன்?
ஜாலியான கல்லுாரி மாணவி கேரக்டர். பசங்க மத்தியில் ஒரு பெண்ணை சமூகம் எப்படி பார்க்கிறது என்பது கதை. முதலில் பதட்டமாக இருந்தேன். இயக்குனர்கள் ஜான், ஷாம் ஈஸியா நடிக்க வைத்தனர். கொரோனாவுக்கு பின் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸாவதால் ஆர்வமாக உள்ளேன்.
காதல், வில்லன் என வழக்கமான கதைக்களம் தானா?
இல்லை, நட்புக்குள் இருக்கும் காதலை மட்டும் பேசும் படம், இந்த மாதிரி நட்பு வாழ்க்கையில் பார்த்திருக்கேன். அவங்க கடைசி வரை நட்பாக இருக்கிறார்கள். படத்துலயும் அதை தான் அழகா காட்டிருக்காங்க.
லாஸ்லியாவின் நண்பர்கள் வட்டம் எப்படி இருக்கு?
இலங்கையில் வேலை பார்த்த இடத்தில் நிறைய நண்பர்கள் இருக்காங்க. அவர்களால் தான் இந்தியா வந்தேன். எது சரி, எது தப்பு என ஆலோசிக்க குறைந்தளவு நட்பு வட்டம் தான் எனக்கு இருக்கு.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் நடித்தது?
இந்த படத்தில் ஜோடி இல்லை, சதீஷ், படவா கோபி, பாலசரவணன் எல்லாருக்கும் முக்கியத்துவம் இருக்கும், ஹர்பஜன்சிங்குடன் நடிக்க போகிறோம் என பயந்தேன், ஆனால் எளிமையாக, ரொம்ப சாதாரணமாக பழகினார். அவருக்கு சதீஷ் தமிழ் வார்த்தைகள் கற்றுக் கொடுத்து பேசினார்.
இலங்கையில் செய்தி வாசிப்பு, இந்தியாவில் நடிப்பு?
பெரிய விஷயம்... பல சோதனைகளுக்கு பின் இந்தியா வந்தேன். இப்ப நினைச்சுப் பார்த்தா கூட பிரமிப்பாக உள்ளது. பிக் பாஸ், சினிமா என நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கு.
'பிரெண்ட்ஷிப்'ல் டான்ஸ், நடிப்பு ஈஸியா இருந்ததா?
டான்ஸ் ரொம்ப பிடிக்கும். படத்தில் 100 சதவீதம் நல்லா டான்ஸ் பண்ணியிருக்கேன். என்னால் முடிந்த அளவு சிறப்பாக நடித்துள்ளேன். ஆனால், படத்தை மக்கள் முழுமையாக பார்த்து கருத்து கூறிய பிறகு தான் என் மேல் எனக்கு நம்பிக்கை வரும்.
பிக் பாஸ் பெயர், புகழ் இப்போது பயன்படுகிறதா?
பிக்பாஸில் இருக்கும்போது ‛எதுக்கு நீங்கள் இங்கே வந்தீங்க' என பலர் கேட்டார்கள். அதற்கு பதிலாக இப்போது நான் வேலையில் கவனம் செலுத்துகிறேன். முதலில் குடும்பம், இரண்டாவது வேலை என பயணிக்கிறேன். பெயரும், புகழும் எப்படி பயன்படுகிறது என தெரியவில்லை.
உங்கள் பார்வையில் காதல் என்றால் என்ன?
காதல் என்பது எதிர்பார்ப்பு இல்லாமல் வருவது. அப்பா, அம்மா, உடன் பிறந்தவர்கள், நட்புகள் என காதலை உணர்கிறேன். அப்பா, அம்மா காட்டும் காதல் எங்கும் கிடைக்கவில்லை. நன் வெற்றி பெற வேண்டும் என்பது அம்மா ஆசை. ‛நீ நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கனும்னு அடிக்கடி சொல்வார். விளம்பரத்தில் நான் வந்தால் கூட அவ்வளவு சந்தோஷப்படுவார்.