சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நடைபெற்றது. அந்த விழாவில் 'சூரரைப் போற்று' படத்திற்கு சிறந்த படம், சிறந்த நடிகர் என இரண்டு விருதுகள் கிடைத்தது.
கொரானோ சூழல் காரணமாக விழா நிகழ்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. விருதுகள் வென்ற பிறகு வீடியோ மூலம் சூர்யாவும் நன்றி தெரிவித்துப் பேசினார். அந்த விருதுகள் சூர்யாவிற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விருதுகளை சூர்யா, மனைவி ஜோதிகா, தயாரிப்பாளர் கற்பூர சுந்தர பாண்டியன் ஆகியோருடன் சேர்ந்து பிரித்தார். அந்த வீடியோவை படத்தைத் தயாரித்த 2 டி நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டது.
இரண்டு விருதுகளை தனது கணவர் வென்றதற்கு ஜோதிகா மிகவும் மகிழ்ந்து தொடர்ந்து கைதட்டிக் கொண்டே இருந்தார். ஓடிடியில் வெளியான படமாக இருந்தாலும் 'சூரரைப் போற்று' படம் ரசிகர்களைச் சென்றடைந்தது. படம் வெளியாகி ஒரு வருடம் ஆகப் போகிறது. இருந்தாலும் இன்னமும் ஓடிடியில் படத்தை ரசிகர்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு கூட ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் 'சூரரைப் போற்று' படப் பாடலான 'கையிலே ஆகாசம்' பாடல் தன்னைக் கண்ணீர் விட வைத்தாக பாராட்டி எழுதியிருந்தார்.